நீடாமங்கலம் மன்னார்குடி சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போது போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். மேலும் அந்த வழியாக தான் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் பொதுமக்களின் வசதிக்காக தட்டி கிராமத்தையும், நீடாமங்கலம் பேரூராட்சி கொத்தமங்கலம் சாலையையும் இணைக்கும் வகையில் கோரையாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி கடந்த மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் பணிகள் முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.