கோபியில் சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள கோர்ட்டு எதிரில் குழி ஏற்பட்டுள்ளது. இதில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்கிறார்கள். சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குழியை மூட வேண்டும்.