தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டி பாலத்திலிருந்து தெக்கூர் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், செல்லம்பட்டி.