ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி தொடங்கும் போதும், முடியும் போதும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவிகள் சாலையை கடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-இளஞ்செழியன், தேன்கனிக்கோட்டை, ஓசூர்.