சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-17 13:14 GMT
கடலூர் பாரதி சாலையில் இருந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம், அண்ணா விளையாட்டு அரங்கம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் புனித வளனார் பள்ளி கல்லூரி செல்லும் சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி அடிக்கடி கீழே விழும் சம்பவம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளமான இந்த சாலை வழியாக அரசு உயர் அதிகாரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு இடையே சென்று வருகிறார்கள். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்