செங்கல்பட்டு மாவட்டம் போரூர் மதனந்தபுரம் பஜனை கோவில் தெருவில் உள்ள சாலை மோசமான நிலையில் காட்சி தருகிறது. இந்த சாலை முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்வதற்கும், வாகனத்தில் செல்வதற்கும் சாத்தியம் இல்லாமலே போய்விட்டது. இந்த தெருவிற்கு புதிதாக யாரேனும் வாகனத்தில் வந்தால், சகதியில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கிறார்கள். எனவே சீரான பயணம் மேற்கொள்வதற்கு ஏற்றவாரு சாலை சரி செய்து தர வேண்டும்.