கோபிசெட்டிபாளையம் அருகே கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமத்தில் உள்ள அலிங்கியம் சாலையின் இருபுறங்களிலும் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து ரோட்டை மறைந்தபடி காணப்படுகிறது. இதனால் ரோடு குறுகியதாக மாறியுள்ளது. எதிரே வாகனங்கள் வரும் போது ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. உடனே செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.