கடலூரில் இம்பிரீயல் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்பவர்கள், சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆகவே பல்லாங்குழி போல் காணப்படும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.