கோவை பாலசுந்தரம் சாலை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்து; சரிவர மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. இதனை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக அங்கு ஒரு குச்சியை நட்டு, அதில் சிவப்பு நிற சாக்குப்பையை வைத்து உள்ளனர். இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.