தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் சாலையிலிருந்து தச்சத்தெரு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை