கோவை பாலசுந்தரம் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு குழி உள்ளது. இந்த குழியால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலையின் நடுவே உள்ள ஆபத்தான குழியை மூட வழிவகை செய்ய வேண்டும்.