குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-08-15 13:26 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, பெருச்சிவண்ணியம்பட்டியில் இருந்து காட்டுநாவல் வரை உள்ள 2 கிலோ மீட்டர் தார்சாலையானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளிலேயே பல்வேறு இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்