சாலை சரிசெய்யப்படுமா?

Update: 2022-08-15 12:26 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார்- ஏந்தல் கிராமத்தில் இருளர் தெரு உள்ளது.இதில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த தெருவில் உள்ள சாலை இது நாள் வரை மண் சாலையாகவே இருந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது வழுக்கி கீழே விழுந்து செல்கின்றனர்.மேலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மண்சாலையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை வசதி