சாலை நடுவே பள்ளம்

Update: 2022-08-14 13:11 GMT
சேலம் தமிழ்ச்சங்கம் ரோடு சங்கர் நகரில் குறுக்கு தெரு அமைந்துள்ளது. அந்த தெருவுக்கு செல்லும் சாலை நடுவே பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து காயம் அடைகின்றனர். இந்தநிலையில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளம் இருப்பதை தெரிவிக்கும் வகையில் அதில் மரக்குச்சிகளை வைத்துள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய முன் வரவேண்டும்.

மேலும் செய்திகள்