கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டி பாளையம் சாலையில் அரசு பள்ளி உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளி நேரங்களில் சாலையை மாணவர்கள் கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.