உடன்குடி நடுக்காலங்குடியிருப்பு மெயின் ரோட்டின் ஓரம் அபாயகரமான பள்ளங்கள் காணப்படுகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் எதிர் எதிரே இரு வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் போது சாலையோர பள்ளத்தில் இறங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையோரம் அபாய பள்ளங்களை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.