சாலை பலத்த சேதம் அடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.