தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-13 14:53 GMT


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த தென் குவளை வேலி ஊராட்சி பகுதியில் வட குவளை வேலி கிராமம் உள்ளது .இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . இந்த நிலையில் வகடகுவளைவேலி கிராமத்திற்கு செல்ல சாலை வசிதி கிடையாது. கரடு,முரடான மண் சாலையாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் சேறும்,சகதியுமாக மாறி விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வடகுவளைவேலி

மேலும் செய்திகள்