தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முப்புடாதி அம்மன் கோவில் பின்புறம் உள்ள தார்சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களுக்கு தசரா திருவிழா தொடங்க உள்ளது. எனவே, இந்த சாலையை சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.