தாம்பரத்திலிருந்து ஆவடி செல்லும் சாலையில் குன்றத்தூர் மேம்பாலம் அருகே இருக்கும் நடைபாதையில் உள்ள சிமெண்ட் பலகை சேதமடைந்துள்ளது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. ஊழியர்களின் சீரிய முயற்சியால் சேதமடைந்த பலகை சரி செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.