மாடவாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரியை இணைக்கும் தரைப்பாலம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார்பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் வர உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணைநின்ற 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.