அந்தியூர் அருகே உள்ள அத்தாணி சத்தி மெயின் ரோட்டை சீரமைத்து அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. அப்போது ரோட்டின் நடுவில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவர்கள் சாலையோரம் கொண்டுவந்து போடப்பட்டன. அதன்பின்னர் அதை ரோட்டின் நடுவிலும் அமைக்கவில்லை. வேறு இடத்துக்கு கொண்டு செல்லவில்லை. இதனால் சாலையோரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க இடமில்லாமல் அவதிப்படுகிறார்கள். அதிகாரிகள் கவனிப்பார்களா?