தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் சாலை, கேம்ப் ரோட்டில் உள்ள தனியார் வங்கி எதிரே இருக்கும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.