செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பிரபல ஐஸ்கிரீம் கடை அருகே இருக்கும் வேலச்சேரி பிரதான சாலை சேதமடைந்து மோசமாக காட்சி தருகிறது. சாலையின் நடுப்பகுதி பள்ளமாகவும், சில இடங்களில் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. சேதமடைந்த சாலை சரி செய்யப்படுமா?