வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-10 13:58 GMT
நாகை மாவட்டம் வாய்மேடு கடைதெருவில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானகங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் பொதுமக்களின் நலன் கருதி வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வேகத்தடை உயரமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழும் நிலை உள்ளது. மேலும் 4 சக்கர வாகனங்களில் செல்லும் போது வாகனங்கள் பழுதாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உயரமாக உள்ள வேகத்தடையை மாற்றி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்