கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அங்குள்ள தனியார் பள்ளிக்கு வாகனங்கள் சென்று வரும் வகையில் உள்ள அரசு கலை கல்லூரி-திருச்சி சாலை முக்கிய சந்திப்பு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் வாகனங்கள் ஏறி இறங்கும்போது பழுதடைவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது தவிர விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே அந்த பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.