புதிய தார்ச்சாலை வேண்டும்

Update: 2022-08-10 12:34 GMT
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட கம்பன் நகர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலை குறுகிய அளவில் உள்ளது. மேலும் மண்பாதையாக உள்ளதால், மழைகாலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். அவ்வப்போது நிலைதடுமாறி சேறு சகதியில் விழுந்து விடுகின்றனர். வாகனங்கள் சேற்றில் சிக்கி கொள்ளும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் பாதையை புதிய தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்