சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-10 11:37 GMT

நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டிபுதூரில் இருந்து மரூர்ப்பட்டி செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் அந்த வழியாக செல்லும் 2 சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரிவதில்லை. அதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்