நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இதன் அருகில் இருந்து வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வரை சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கப்பட்ட சாலையின் உயரம் இருபுறமும் சற்று அதிகமாக இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.