சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-09 17:12 GMT

சேலம் கோரிமேட்டில் இருந்து ஏ.டி.சி. நகர் செல்லும் சாலையில் மசூதி அருகில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிறு விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்லும் மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-சதீஷ், கோரிமேடு, சேலம்.

மேலும் செய்திகள்