கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து சூளகிரி செல்லும் சாலையில் தற்போது நெடுஞ்சாலை துறை சார்பாக தார்சாலை புதியதாக போடப்பட்டுள்ளது. தார்சாலை போடும்போதே வங்கி எதிரிலும், பழைய சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் பிரிவு ரோட்டிலும் வேகத்தடை அமைக்க பல முறை புகார் அளித்தும் இதுவரை அமைக்கவில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குறிப்பிட்ட இடங்களில் விரைவில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ரவிசங்கர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.