மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கீழே தள்ளிவிடுகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை அவ்வபோது முட்டிவிடுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?