தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-09 13:28 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வழியில் பஸ் நிலையம் அருகே வளைவான பகுதி உள்ளது. இச்சாலை வழியாக வேகமாக வாகனங்கள் இந்த வளைவு பகுதியில் வரும்போது விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு இந்த வளைவு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் கடந்த மாதம் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தியின் எதிரொலியாக பஸ் நிலையம் அருகே உள்ள வளைவான பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடை அமைத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க காரணமான தினத்தந்தி புகார் பெட்டிக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்