கரூர் திண்ணப்பா தியேட்டரில் இருந்து செங்குந்தபுரம் செல்லும் பிரதான சாலை நீண்ட நாட்களாகவே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். ஒருசில நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.