மணப்பாட்டில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் சாலையானது சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மோசமாக உள்ளது. இந்த சாலை ஏற்கனவே மேடாகவும், வளைவாகவும் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் வேகமாக சென்றால் தான் ஏற முடியும். இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுகிறேன்.