பொதுமக்கள் அவதி

Update: 2022-08-09 11:24 GMT

தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் எதிரே உள்ள இந்திராநகர் 2-வது தெருவில் சாலை அமைப்பதற்காக ரோட்டின் நடுவில் ஜல்லி கற்கள் போடப்பட்டு உள்ளது. கடந்த 6 நாட்களாக ஜல்லி விரிக்கப்படாமல் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் கடும் அவதிப்படுகிறார்கள். ஆகையால் சாலையில் ஜல்லி கற்களை விரித்து உடனடியாக தார்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்