உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.