சாலை சரிசெய்யப்படுமா?

Update: 2022-08-08 17:03 GMT

சேலம் பொன்னமாபேட்டை தம்பிகாளியம்மன் கோவில் 2-வது தெருவில் உள்ள சாலை மண்சாலையாக உள்ளது. தற்போது பெய்த மழையால் இங்குள்ள சாலை சேறும்சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகனஓட்டிகளும் சிரமத்துடன் செல்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தும் பலனில்லை. தற்போது மீண்டும் மழைபெய்ய உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்யவேண்டும்.

-துரை, தம்பிகாளியம்மன் கோவில் தெரு, சேலம்.

மேலும் செய்திகள்