திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடி கிராமத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான குரு ஸ்தலம் அமைந்துள்ளது . இந்தக் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை கடித்து விடுகின்றன. மேலும், இரவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது.எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் ஆலங்குடி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.