போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Update: 2022-08-08 15:04 GMT
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் வழியாக தான் அரசு ஊழியர்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி தொடங்கியது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பணிகள் முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அந்த வழியாக வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்