குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-08 13:38 GMT

திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முசிறி-குளித்தலை பாலத்தின் கீழிருந்து மனமேடு வரை சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்