கோவை பாலசுந்தரம் சாலை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் உள்ள சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.