கோவில்பட்டி புதுரோடு பகுதியில் மழைக்காலத்தில் அரித்து வரப்பட்ட மணல் திட்டுகள் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் ஆபத்து உள்ளது. எனவே, மணல் திட்டுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.