மண் குவியல் சமப்படுத்தப்படுமா?

Update: 2022-08-08 10:53 GMT

ஆறுமுகநேரியில் திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் வேலைகள் முடிந்ததும் மண்ணை அங்கே பிரமிடு போன்று குவித்து வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இது பாதசாரிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே, அதனை சமப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்