சாலை சரி செய்யப்படுமா?

Update: 2022-08-07 16:56 GMT

சேலம் மாவட்டம் தலைவாசலில் இருந்து சதாசிவபுரம் வழியாக செல்லும் சார்வாய் சாலை முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் வழியாக செல்லவே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சாலையை சரிசெய்ய வேண்டும் என மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.

-ஆறுமுகம், சார்வாய், சேலம்.

மேலும் செய்திகள்