சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் இருந்து பாப்பாபட்டி செல்லும் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணி நடைபெற்று நிறைவடையாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்ல முடியாமல் வாகனஓட்டிகள் மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்கின்றனர். இதனால் காலவிரயம் ஏற்பட்டு அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.