கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கத்திரிப்பள்ளியில் இருந்து நெடுஞ்சாலை கிராமம் வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.
-அருணா, கத்திரிப்பள்ளி, கிருஷ்ணகிரி.