குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-07 15:09 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கருப்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கருப்பூரில் இருந்து ஏனங்குடி செல்லும் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையில் பள்ளங்கள் அதிகளவில் இருப்பதால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், குண்டும், குழியுமான சாலையினால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்