நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சியில் கீழக்கரையிருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் இருந்து புறா கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் பள்ளி- கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சேறும் சகதியமாக காட்சியளிப்பதால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.