நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் சக்தி விநாயகர் கோவில் தெருவில் இருந்து தெற்குத்தெரு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சக சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சமபந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.